Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்!

திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை இயங்கிவந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கன்னியாகுமரி மாவட்ட மக்களும் பயனடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த ரயிலுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கான பகல் நேர ரயிலாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இருந்தது. திருச்சி முதல் திருநெல்வேலி வரையிலும் இந்த ரயில் இயங்கி வந்தது. இதனால், பகல் நேரத்தில் ரயிலில் பயணம் செய்ய விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, கேரள மக்களும் இந்த பகல் நேர ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்புச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்புச் செய்வதாக கடந்த மாதம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவித்தார். அதன்படி, இன்று முதல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் வரை பயணிக்க உள்ளது. காலை 7.05 மணிக்கு திருச்சியில் புறப்பட்ட இந்த ரயிலில் நெல்லை, குமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகளும்  பயணம் செய்கின்றனர். 

இந்த ரயில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நிறுத்தப்படாது என தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. பின்னர், பயணிகளின் வற்புறுத்தல் காரணமாக இந்த ரயில் வள்ளியூரில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நெல்லை, குமரி மாவட்ட மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை நீட்டிப்புச் செய்ய உறுதுணையாக இருந்த மத்திய  இணை அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனும் இந்த ரயிலில் பயணம் செய்கிறார். அவருக்கு வள்ளியூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 

இந்த ரயிலை வரவேற்க பல்வேறு ரயில் நிலையங்களிலும் பயணிகள் நலச்சங்கத்தினர் காத்திருக்கிறார்கள். இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பகல் 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. இதனிடையே, மறு மார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து 11.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு திருச்சியைச் சென்றடையும். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close