Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்! வலுவான ஆஸ்திரேலியாவைச் சமாளிக்குமா தென் ஆப்ரிக்கா ?

மகளிர் உலகக் கோப்பை  முக்கியமான கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்குத் தகுதிப் பெற்றுவிட்ட நிலையில் இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதிக்குள் நுழைவதற்காக இன்று மல்லுக்கட்டுகின்றன. 

இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா இடையேயான போட்டியும் நடைபெறவிருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை தோற்கடித்து அதிர்ச்சி தந்திருக்கிறது. மேலும், எளிதாகவும் அரையிறுதியில் நுழைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி வலுவான அணியாக விளங்கினாலும்  இங்கிலாந்துக்கு எதிராகச் சேசிங்கில் தோற்றது. 

மேக் லானிங்

நீ கிர்க் தலைமையில் அபாரமாக ஆடிவரும் தென் ஆப்ரிக்கா அணி இன்று ஆஸ்திரேலியாவை வெற்றிக் கொள்ள விரும்புகிறது. இந்த இரண்டு அணிகளில் எது ஜெயிக்கிறதோ அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது. "தென் ஆப்ரிக்காவை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளமாட்டோம். அந்த அணிக்கு எதிராக நிறைய திட்டங்களை வைத்திருக்கிறோம். இந்தப் போட்டியில் வென்று அரையிறுதியில் நல்ல மனவலிமையுடன் ஆடவே விரும்புகிறோம்' எனச் சொல்லியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக் லானிங்.  ''ஆஸ்திரேலியாவை சந்திக்கத் தயார்'' என நம்பிக்கையோடு பேசுகிறார் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் நீ கிர்க். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close