Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தின் காரணமாக, இன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழகத்தின் பல இடங்களில், வெப்பச்சலனத்தின் காரணமாக இன்னும் லேசான சாரல் மழை தொடர்கிறது. தற்போது தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை வலுவடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பச்சலனத்தின் காரணமாகவே, தமிழகத்தில் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை குறைந்து காணப்பட்டாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இனி வரும் காலங்களில் வெப்பச்சலனத்தால் மழைப்பொழிவு குறைந்து பருவமழையால் மழை கூடும் எனக் கூறப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று காலையிலிருந்தே வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் அதிகப்பட்சமாக 4 செ.மீ. மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close