Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பதினெட்டு வயது இளைஞர் ஶ்ரீநகரின் குடிமைத் தூதராக நியமிக்கப்பட்டது ஏன் தெரியுமா?

பிலால் தர் என்ற 18 வயது இளைஞர் ஶ்ரீநகரின் குடிமைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குக் காரணம் இவர் தன் சொந்த முயற்சியினால் இதுவரை 12 ஆயிரம் கிலோ குப்பைகளை ஏரியிலிருந்து அகற்றியுள்ளார். 

இளைஞர்

வடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த பிலால் தர், குப்பைகளைப் பொறுக்கும் பணியைச் செய்து அதனை விற்று வருமானம் ஈட்டி வந்தார். ஒருநாளைக்குக் குப்பைகளை விற்று 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை ஈட்டிவந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குப்பைப் பொறுக்கும் பணியைச் செய்து வந்த இவர் இதுவரை 12 ஆயிரம் கிலோ குப்பைகளை அங்கிருந்து அகற்றியிருக்கிறார். 

அவரது இந்த முயற்சியைப் பாராட்டும் வகையில் அவருக்கு குடிமைத் தூதர் என்ற பொறுப்பை ஶ்ரீநகர் நகராட்சி வழங்கியுள்ளது. அவருக்கென்று சிறப்பு சீருடையும் வாகனமும் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களிடம் சென்று தங்களுடைய சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது பற்றியும், சுற்றுச்சூழல் குறித்த முக்கியத்துவம் குறித்தும் பிரசாரம் செய்வார் என்றும் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close