Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சவூதியில் அவதிப்படும் தாய்! மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத கலெக்டர்- மீட்க போராடும் மகன்!

சவூதியில் அவதிப்படும் தனது தாயாரை மீட்க கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகன் பலமுறை மனுக்கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. "சிக்கி தவிக்கும் தன் தாயை மீட்டு தாயகம்   கொண்டு வர  மத்திய, மாநில அரசுகள் உரிய  நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார் செல்வராணியின் மகன்.

கன்னியாகுமரி மாவட்டம்  திட்டுவிளை  பகுதியை சேர்ந்த மேரி செல்வராணியினை கணவர்  பிரிந்து சென்று விட்டார்.  கூலி வேலை செய்து தனது  இரு மகன்களையும் வளர்த்து வந்த மேரி, குடும்ப வறுமை காரணமாக இவர் கடந்த  2013-ம் ஆண்டு ஏஜென்ட்கள்  மூலம்  சவுதி அரேபியாவில்  உள்ள ரியாத் என்ற இடத்துக்கு வீட்டு வேலைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர்  அவரிடம்  இருந்து  தொடர்பு கிடைக்க பெறவில்லை. அவரது மகன் பல  இடங்களில் புகார் கொடுத்தும் தாய் இருக்கும் இடம் தெரியவில்லை. அனுப்பிய  ஏஜென்டிடம் கேட்டபோது, உரிய பதில் கிடைக்கவில்லை.

இந்தநிலையில்  கடந்த சில  நாள்களுக்கு  முன்பு அவரது  மகனுடைய கைபேசிக்கு  அரேபிய  முதலாளியின்  கைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது பேசிய அவரது தாய், "தான்  வேலை செய்யும்  இடத்தில்   கஷ்டப்பட்டு வருவதாகவும்,  ஒவ்வொரு  மாதமும் வேறு வேறு  இடங்களில்  உள்ள வீடுகளுக்கு  தன்னை அழைத்து சென்று  வேலை  வாங்கி வருவதாகவும், சாப்பாடு கொடுக்காமல், உடல் நிலையும் சரியில்லாமல் வாடி வரும் தன்னை உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள்" என கதறி அழுது உள்ளார்.

மேலும் அவரது  விசா முடிந்த நிலையிலும் அவரை சொந்த  ஊருக்கு  அனுப்பாமல்  கொடுமைப்படுத்தி வருவதாக  கூறப்படுகிறது. தனிமையில் வாழும் அவரது மகன் ஜோசப் ராஜ் தன் தாயை மீட்டு  கொண்டு வர  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பல மனுக்கள் கொடுத்த  பின்னரும் அதற்குரிய  நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தனிமையில் சிக்கி தவிக்கும் தன் தாயை மீட்டு தாயகம் கொண்டு வர  மத்திய, மாநில அரசுகள்  உரிய  நடவடிக்கை  எடுக்க வேண்டும்" என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார் செல்வராணி மகன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close