Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் வீட்டுக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தவர்கள் கைது

வீட்டுக்கடன் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த மூன்றுபேரை திருச்சி மாநகர போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருச்சி திருவானைக்கோயில் ஸ்ரீனிவாச நகரைச் சேர்ந்த சேதுராமன் என்பவரின் மனைவி சுமதி என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

மனுவில், தன்னிடம் வங்கியில் வீட்டுக்கடன் ரூ.1 கோடி பெற்றுத் தருவதாகவும், அதற்கு கமிஷன் மற்றும் பத்திரச்செலவு தொகையாக ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக் கூறி திருச்சி, புத்தூர், முத்துராஜா தெருவைச் சேர்ந்த கதிர்வேல் மனைவி பரமேஸ்வரி, புத்தூரைச்  சேர்ந்த மோகன் என்பவரின் மனைவி கௌரிமுத்து என்கிற லெட்சுமி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர், தன்னிடம் ரூ.2,26,000/- பெற்றுக்கொண்டு வீட்டுக்கடன் பெற்றுத் தராமல் பண மோசடி செய்து வருவதாகவும், தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தருமாறு கோரியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை செய்த தில்லை நகர் போலீஸார், பரமேஸ்வரி, கௌரிமுத்து என்கிற லெட்சுமி, செல்வராஜ் ஆகிய மூவரையும் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.80,000 கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

வங்கியில் கடன் வாங்கித்தருவதாக மோசடி செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close