Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முசிறி அருகே போலி மருத்துவர் நடத்திய மருத்துவமனைக்கு சீல் வைப்பு!

போலி மருத்துவர்முசிறி அருகே போலி மருத்துவர் நடத்திய  மருத்துவமனைக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த அயித்தாம்பட்டி கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் எம்.டி படித்திருப்பதாக கூறி கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் புகார் அனுப்பினர். இதையடுத்து அயித்தாம்பட்டி கிராமத்திற்கு நேரில் வந்த மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சம்சாத்பேகம், போலிமருத்துவர் புஷ்பராஜ் நடத்தி வந்த கிளினிக்கில், ஆய்வு செய்தனர்.

ஆய்வில் அவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.  கிளினிக்கில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான ஆங்கில மருந்து, மாத்திரை, ஊசிமருந்துகள் கைப்பற்றப்பட்டது.  அரசு மருத்துவ அதிகாரிகளைக் கண்டதும் போலி மருத்துவர் புஷ்பராஜ் தப்பி ஓடி தலைமறைவானார். ஆங்கில மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த புஷ்பராஜ் மீது முசிறி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். சுமார் பத்து ஆண்டுகளாக ஆங்கில மருத்துவர் எனக் கூறிக்கொண்டு போலி மருத்துவராக புஷ்பராஜ் அப்பகுதி மக்களுக்குச் சிகிச்சை அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close