Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஈடுகட்டும் விதமாக 'வனநகரம்' அமைக்கப்போகும் சீனா!

தொழில்துறையில் அதிவேக வளர்ச்சி கண்ட சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வன நகரம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது அந்நாடு.

நாட்டின் தொழில்துறை வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாசிக்கத் தனியாக காற்றுப்பைகள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, சீனா. இதில் குறிப்பாக அதன் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக லியுஜோ எனும் வன நகரத்தை உருவாக்க சீன அரசு முடிவெடுத்துள்ளது. 30 ஆயிரம் பேர் வசிக்கப்போகும் இந்த நகரத்தில் 10 லட்சம் தாவரங்கள், 30 ஆயிரம் மரங்கள் அமைக்கப்படுகின்றன. அவை அனைத்துமே கட்டடங்களின் மீது அமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இந்த மரங்களும், தாவரங்களும் சேர்ந்து ஓர் ஆண்டுக்கு 10 ஆயிரம் டன் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி 900 டன் ஆக்ஸிஜனை வெளியிடும். இதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடம், லியுஜோ நகரம். அதனால் பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அலுவலக கட்டடங்கள் என அனைத்திலும் மரங்கள் இருக்கும். இதனால் நகரமே பசுமையான வனம் போல காட்சி தரும். இந்த நகரத்தை ‘ஸ்டெபெனோ போரி ஆர்கிடெட்டி’ என்ற நிறுவனம் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மரங்கள் செடிகளுடன் இயற்கை சார்ந்த கட்டடங்களை உருவாக்கிய முன்னனுபவம் இந்நிறுவனத்துக்கு உண்டு. இந்நிறுவனம் இத்தாலி மிலன் நகரில் வடிவமைத்த ‘வெர்ட்டிக்கல் பாரஸ்ட் டவர்ஸ்’ என்ற கட்டடம், 900 மரங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் ஒரு நகரம் முழுவதும் வனமாக மாற்றும் நோக்கம் கொண்டு உருவாக்கப்படுவது உலகில் இதுதான் முதல்முறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close