Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளுக்கான ரூபே கார்டு திட்டம்; திருச்சியில் துவங்கிவைத்த அமைச்சர்கள்

 

திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சார்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் மற்றும் ரூபே விவசாயக் கடன் அட்டைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

மாவட்ட ஆட்சியர் இராசாமணி, தலைமையில் நடந்த இந்த விழாவில், திருச்சி எம்.பி ப.குமார், மத்தியக் கூட்டுறவு வங்கித்தலைவர் டி.இராமு, அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய வெல்லமண்டி என்.நடராஜன்,

“திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான ரூபே கார்டு திட்டம் முதன்முதலாக செயல்படுத்தப்படுகின்றது.

இதன் மூலம் பணத்தை எடுத்துச் செல்லாமல் கடன் அட்டைகள் மூலம் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். அரசுத்திட்டங்கள் அனைத்தும் இதன் மூலம் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களை எளிதாகச் சென்றடைகிறது. இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல் பரிவர்த்தனை சிறப்பாக நடைபெறுகிறது. 62 கிளைகளை உள்ளடக்கிய மத்தியக் கூட்டுறவு வங்கி திருச்சி, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அரிய சேவைகளை விவசாயிகளுக்கும் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கும் வழங்கி வருகிறது.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் ரூபே விவசாயக் கடன் அட்டைகளை எந்த ஏடிஎம் இயந்திரத்திலும் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக, கடன் தொகையைத் தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் அவ்வப்போது தேவைக்கேற்ப எந்த ஊரில் தேவையோ அந்த ஊரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொள்ளலாம். கிராமப்புற விவசாயிகள் இந்த ரூபே விவசாயக் கடன் அட்டை மூலம் நகர்ப்புறத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து மற்ற இதர விவசாய தேவைகளுக்கும் பணம் எடுத்துக் கொண்டு விவசாய இடுபொருள்களைக் கொள்முதல் செய்யலாம். அனைத்து விவசாய தேவைகளுக்கும் ரூபே விவசாயக் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தலாம்“ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close