Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: வெகுவிமர்சையாக நாளை தொடங்குகிறது!

மயிலாடுதுறை அருகே இருக்கும் கூறைநாடு அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.  


சிவபெருமானை மதிக்காமல் தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால், சாபம் பெற்ற இந்திரன் புனுகுப் பூனையாகப் பிறவியெடுத்தார். பின்னர் இத்தளத்திலுள்ள சிவபெருமானை நோக்கி தவமிருந்து வழிபட்டு, மீண்டும் தன் தேவலோக தலைமைப் பதவியைப் பெற்றார் என்பது கோயிலின் தல வரலாறு. இந்தக் கோயிலில் திருநள்ளாற்றில் இருப்பது போலவே, சனிபகவானுக்குக் கிழக்கு நோக்கி தனி சந்நிதி அமைந்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும். 

கூறைநாடு

கோயில் திருவிழா குறித்து கும்பாபிஷேகக் கமிட்டித் தலைவர் பி.ரெங்கராஜ் கூறுகையில், ’கோயிலின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 10 -ம் தேதி திங்கட்கிழமையிலிருந்து வேத பாராயணங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்தில், கலந்துகொள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்கின்றனர்’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close