Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் கைத்தறி கண்காட்சியைத் துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தேசிய கைத்தறி தினவிழாவினை முன்னிட்டு, திருச்சி உறையூர், சாலை ரோடு, ஜி.கே.எம்.மினி ஹாலில் சிறப்பு கைத்தறி கண்காட்சி தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலமாக இன்று முதல் 29-ம் தேதி வரை 15 நாள்கள் நடக்கிறது. இந்தக் கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தார்கள்.

கைத்தறி கண்காட்சி

மேலும் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற வளாக விற்பனையில் அதிக அளவில் கொள்முதல் செய்த வாடிக்கையாளர்கள், அதிக அளவில் உற்பத்தி செய்த நெசவாளர்கள் மற்றும் அதிக அளவில் விற்பனை செய்தவர்களுக்குப் பரிசுத் தொகைகளை அமைச்சர்கள் வழங்கினர். 

திருச்சியில் நடக்கும் சிறப்பு கைத்தறி கண்காட்சியில் சுமார் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள், வேட்டிகள், திரைச் சீலைகள், என அனைத்து ரகங்களும் நவீன வடிவமைப்பிலும் நேர்த்தியான வண்ணங்களிலும் 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட கைத்தறி ஆடை இரகங்களைப் பொதுமக்கள் பெருமளவில் கொள்முதல் செய்து பயன்படுத்தலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close