Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெருந்தலைவர் பிறந்த ஊரில் பிறந்த நாள் கொண்டாட்டம்!


பெருந்தலைவர் கர்ம வீரர் காமராசரின் 115 வது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த மண்ணான விருதுநகரில் அரசு சார்பிலும், சமுதாய அமைப்புகள் சார்பிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது நினைவில்லத்தில் முக்கிய பிரமுகர்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள், சமுதாயத்தலைவர்கள் பொதுமக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினார்கள். 
 

நாடார் மகாஜன சங்கம் காமராசர் பிறந்த நாளை, ஆண்டு தோறும் கல்வித்திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இவர்கள் நடத்தும் விழாவில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள், கல்வி உதவித்தொகை, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. 


   

காலையில் நடந்த திருவிளக்கு ஆராதனையில்  தமிழிசை சவுந்தரராஜன், கீதா ஜீவன் கலந்து கொண்டனர், அதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., மாஃபா பாண்டியராஜன், சனமுகநாதன், ராஜகண்ணப்பன், மனோஜ்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்கள். ஓ.பி.எஸ். பேசும்போது, ''இந்த பினாமி ஆட்சியில் நாடார்களை புறக்கணித்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை'' வைத்தார்.


அதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் அனிதாராதாகிருஷ்ணன், தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.டி.ஆர்.தியாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மதியம் 2 மணிக்கு தமிழக அரசு சார்பில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடம்பூர்ராஜு, ராஜேந்திரபாலாஜி, தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்களுக்கு பரிசு வழங்கிவிட்டு பேசும்போது, ''இந்த அரசு காமராஜர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.'' என்றார்.


மாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் பிறந்த தின பொதுகூட்டம் நடந்தது. இதில் புதுவை முதல்வர் நாராயணசாமி, தமிழக தலைவர் திருநாவுக்கரசர் , மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கல்விக்கண் திறந்தவரின் பிறந்த தினத்தை அவர் பிறந்த ஊரில் கல்வியை போற்றும் விழாவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் விருதுநகர் மக்கள். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close