Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிமன்ற பணியிடங்களை நிரப்புங்கள்..! - அகில இந்திய வழக்கறிஞர் சங்க கிளை கோரிக்கை

 

திருப்பூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை உடனடியாக நிரப்புமாறு தற்போது கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரமான திருப்பூரில் மாவட்ட நீதிமன்றம் துவங்கி சில ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல்தான் நீதி மன்றங்கள்  செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீதிபதிகளின் பணிமாற்றம், பதவி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த பல மாதங்களாகவே  இங்கு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மகிளா நீதிமன்ற நீதிபதி, காசோலை வழக்குகளுக்கான குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 3  நீதிபதி ஆகிய மூன்று நீதிபதி பணியிடங்கள் இன்றளவும் நிரப்பப்படாமல் கிடக்கின்றன.

இதன் காரணமாக மகிளா நீதிமன்றத்தில் நூற்றுக் கணக்கான வழக்குகளும், நீதித்துறை நடுவர் எண் - 3 ல் 1352 வழக்குகளும், காசோலை வழக்குகளுக்கான குற்றவியல் நீதிமன்றத்தில் 1200-க்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. எனவே, இன்னமும் தாமதிக்காமல் நீதிமன்றப் பணியிடங்களில் நீதிபதிகளையும், குற்றவியல் நடுவரையும் உடனடியாக நியமிக்குமாறு அகில இந்திய வழக்கறிஞர் சங்க திருப்பூர் மாவட்ட கிளையைச் சேர்ந்தவர்கள் 150 - க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களிடம் கையெழுத்துப் பெற்ற கோரிக்கை மனுவை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close