Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணல் குவாரிகளுக்கு திருச்சி தலைமையிடமா ?   -  அதிர்ச்சியில் டெல்டா விவசாயிகள்

தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு தலைமை இடமாக திருச்சி இருக்கும் என அரசு அறிவித்துள்ளது, திருச்சி மற்றும் டெல்டா விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மணல் குவாரி மேற்பார்வை அதிகாரி எனும் புதிய பதவி உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ளுவதை மேற்பார்வையிட ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆறுகளில் மணல் எடுக்கும் அனுமதியை ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் தம்புராஜை அளிப்பார் எனவும், இந்த மணல் குவாரிகளின் மேற்பார்வை தலைமை அலுவலகமாக திருச்சி மணல் குவாரி செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது,

ஏற்கெனவே காவிரி ஆறுகளில் செயல்பட்டு வரும் சட்டவிரோத மணல் குவாரி, புதிதாக அமைக்கப்பட்டு உள்ள காமநாயக்கன்பாளையம் சிறுகமணி கிழக்கு மணல் குவாரி, கொள்ளிடத்தில் உள்ள மணல் குவாரிகள் என அனைத்துப் பகுதிகளிலும் சட்டவிரோதமாக விதிகளை மீறி 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஆறு முழுக்க 10 அடி முதல் 20 அடி ஆழத்துக்குமேல், களிமண் மற்றும் பாறை தெரியும்வரை மணல் எடுக்கப்பட்டு வருகிறது. மணலை அள்ளுவதற்கு 2 பொக்லைன்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் ஆற்றில் 4 முதல் 7 வரை ஜே.சி.பி & பொக்லைன் இயந்திரங்கள் எப்போதும் நிறுத்தப்பட்டு மணல் அள்ளப்படுகிறது. எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும், சிகப்பு கொடிக்கம்பங்களும் நட்டுஎல்லையை வரையறுத்து எங்கும் பிரித்துக் காட்டவில்லை. மணல்குவாரி ஒரு ஊரில் அமைகிறது என்றாலே, அதன் கிழக்கு மற்றும் மேற்கில் ஆறு முழுக்கவே அடுத்த குவாரி அமையும் ஊர் வரை மணல் அள்ளுவது என்பதுதான் நடைமுறையாக உள்ளது. ஆனால் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. காவிரி உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை அதிகமாக உள்ளது. அத்துமீறி மணல் அள்ளுவதால் காவிரி ஆறு கபளீகரம் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், திருச்சி மணல் குவாரிகளுக்கு தலைமை இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close