Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13-ம் ஆண்டு நினைவு தினம்: பெற்றோர்கள் அஞ்சலி!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான குழந்தைகளின் 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, பலியான குழந்தைகளின் படத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கும்பகோணம் தீ விபத்து

கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் கடந்த 2004- ம் ஆண்டு ஜூலை 16- ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. நாட்டையே உலுக்கி போட்ட இந்த சம்பவத்தில், 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த தீ விபத்து நடைபெற்ற 13-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கும்பகோணத்தில் கடைபிடிக்கப்படுகிறது. தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன் பலியான 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இன்று மாலை 5 மணியளவில், 94 குழந்தைகள் நினைவாக தீ விபத்து நடைபெற்ற பள்ளியில் இருந்து ஊர்வலமாக சென்று, மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close