Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை..! ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் எச்சரிக்கை

மாணவர்கள் சாதிய மோதல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

டி.ஐ.ஜி.பிரதீப்குமார்

 

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றுள்ள பிரதீப்குமார் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் "ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். மாவட்டத்தில் சமீப காலமாக நடைபெற்ற சாதிய மோதல்கள் மற்றும் குற்றச் சம்பவங்களில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் வருத்தத்தினை ஏற்படுத்துகிறது. ஆத்திரம் மற்றும் போட்டி மனப்பான்மையினால் ஆவேசப்பட்டு இது போன்ற சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுவிடுகின்றனர்.

ஆனால் இது அவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும். தற்போதைய சூழலில் அரசுப் பணிக்கு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறக்கூட காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழ் தேவையுள்ளது. எனவே மாணவர்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கி கொள்ளக்கூடாது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட வேண்டும் என்பது காவல்துறையின் எண்ணமில்லை. அதே நேரத்தில் சாதிய மோதல்கள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர் பயிலும் கல்லூரி, பள்ளி மூலமும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும்.

எனவே குழுமோதல், சாதி சண்டைகளில் மாணவர்கள் தங்கள் எதிர்கால நலன் கருதி ஈடுபடக்கூடாது. கடந்த 3 மாத காலத்தில் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கவும், வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தனி கோப்பு உருவாக்கப்பட்டு குண்டர் சட்டத்துக்கு நிகரான வழக்கு பதியப்படும். மேலும் மாவட்டத்தில் நடைபெறும் கடத்தல் சம்பங்களைத் தடுக்கவும், வாகன விபத்துக்களைக் குறைக்கவும் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார். 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close