Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கின்னஸ் சாதனை படைத்த மதுரை வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு!

இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒரே நேரத்தில் 1000க்கும்  மேற்ப்பட்ட வீரர்கள் இணைந்து தொடர்ச்சியாக டேக்வாண்டோ நிகழ்வுகளை காட்சிப்படுத்தி சாதனை செய்துள்ளனர்.

இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு வீரர்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக மதுரையில் இருந்து 200க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த சாதனை நிகழ்ச்சியை கின்னஸ் அங்கீகரிக்கும் அணி பார்வையிட்டு அதற்கான அங்கீகார சான்றிதழை வழங்கியது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் கலந்துகொண்டு மதுரைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பாராட்டு விழா மதுரை எம்.ஜி.ஆர் திடலில் நடத்தப்பட்டது.


இதில் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் , ஒலிம்பிக் வைஸ் பிரசிடண்ட் சோலை ராஜா , டேக் வாண்டோ பிரசிடெண்ட்  ஜெயத் ரெட்டி , மதுரை டேக்வாண்டோ பயிற்சியாளர் நாரயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . போட்டியில் கலந்துகொண்டு சிறப்பான முறையில் திறமையை வெளிப்படித்திய வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close