Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவிஞர் வைரமுத்துவுக்கு அன்பளிப்பாக கிடைத்த ஆடு!

கவிப்பேரசு வைரமுத்துவுக்கு பிறந்தநாள் பரிசாக ஆடு வழங்கப்பட்டது. இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவர் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் இதனை பெற்றுக் கொண்டார்.

இதை தன் தோட்டத்தில் வளர்க்கப் போவதாக உற்சாகத்தோடு தெரிவித்துள்ளார். இந்த ஆடு நீண்ட தூரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு.

கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள கெங்குவார் பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் தனது தோட்டத்து பங்களாவில் இலக்கிய ரசிகர்களுக்கும் குடும்ப நண்பர்களுக்கு பிறந்தநாள் விருந்து அளித்தார் வைரமுத்து. புத்தகம், பேனா, மலர்செண்டு, மலர் மாலை, பொன்னாடை என பலரும் பலவிதமான அன்பளிப்புகளை வழங்கி, வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த தருணத்தில் தஞ்சையில் இருந்து வந்திருந்த, இவரது குடும்ப நண்பரும் வெற்றித் தமிழர் பேரவையின் துணைப்பொதுச் செயலாளருமான செழியன், ஆடு ஒன்றை வழங்கி வைரமுத்து உள்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

”எங்க கவிஞருக்கு கால்நடைகள்ல மேல ரொம்பவே பாசம் அதிகம். நாவல்கள்ல, சினிமா பாடல்கள்ல எல்லா ஆடு, மாடுகளை நேசத்தோடு குறிப்பிடுவாரு. கடந்த 29 ஆண்டுகளா, கவிஞரோட பிறந்தநாள் விழாவுக்கு வந்துக்கிட்டு இருக்கேன். ஆனா எனக்கு இந்த வருசம் தான் இந்த யோசனை வந்துச்சு. கவிஞர் ரொம்பவே சந்தோசப்பட்டார். ’இதை நானே வளர்க்குறேன்’னு பரவசமா சொன்னார். மத்தவங்களுக்கும் முன்னுதாரணமா இருக்கட்டுமேனுதான் பரிசளிப்பா ஆடு கொடுத்தேன். நாம உயிக்கு உயிரா நேசிக்குறவங்களுக்கு, உயிருள்ள ஒரு ஜீவனை அன்பு பரிசா கொடுக்குறதுங்கறது ஒரு அலாதியான அனுபவம். வீடுகள்ல ஆடு வளர்ப்புங்கறது அரிதாக்கிட்டு இருக்குற இன்னைய காலகட்டத்துல மத்தவங்களுக்கும் முன்னுதாரணமா இருக்கட்டுமேனுதான் பரிசளிப்பா ஆடு கொடுத்தேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் செழியன்.

இவரது உயரிய நோக்கத்தை பலரும் பாராட்டுகிறார்கள். மரம் வளர்ப்பு அரிதாகிக் கொண்டிருந்த தருணத்தில் சுற்றுச்சூழலில் அக்கறையுள்ளவர்கள் விழாக்களில் அன்பளிப்பாக மரக்கன்று கொடுக்கும் கலாச்சாரத்தை துவக்கி வைத்தார்கள். அதுபோல் அன்பளிப்பாக கால்நடைகள் கொடுக்கும் கலாச்சாரம் இனிவரும் காலங்களில் தழைத்தோங்கட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close