Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணத்துக்காக கமல்ஹாசன் எதையும் செய்வார்..! அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கு

நடிகர் கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்பவர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். 

சி.வி.சண்முகம்


விழுப்புரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான பந்தக்கல் நடுவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், 'சினிமாவில்  வாய்ப்பில்லாத நிலையில் கமல்ஹாசன் டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

அவர் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் திருமணம் ஆகாமல் நடிகையுடன் வாழ்ந்துவந்தார். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்தி பேசியுள்ளார். அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என்று கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close