Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடிதண்ணீர் தராவிட்டால் கிரிக்கெட் போட்டியை எதிர்ப்போம்! - நூதன போராட்டத்தால் அதிகாரிகள் கலக்கம்!

தாழையூத்து பகுதியில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்காவிட்டால், அங்கு நடைபெற உள்ள டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த விடமாட்டோம் என மனிதநேய மக்கள் கட்சி எச்சரித்து உள்ளது.

தாழையூத்து ஊராட்சிப் பகுதிகளில், ஊராட்சி நிர்வாகத்தால் கடந்த பல மாதங்களாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இது குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு பலமுறை கொண்டுசெல்லப்பட்டும் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படவில்லை.

குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கான காரணங்களைக் கண்டறிந்து, நீண்ட கால செயல்திட்டம்மூலம் நிரந்தரத் தீர்வு காண முயலாமல், அதிகாரிகள் கண்துடைப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.

 மக்கள் போராட்டம் நடத்தினால், அடுத்த ஓரிரு தினங்களுக்கு லாரியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பதும் பின்னர் கண்டுகொள்ளாமல் விடுவதுமாக இருந்தனர்.

தாழையூத்து பகுதியில் உள்ள சிமென்ட் ஆலையால், ஏற்கெனவே சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மக்கள், தங்களது குடிநீர்த் தேவைகளுக்கு நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதால் அதிருப்தி அடைந்தனர். அதனால், டிஎன்பிஎல் போட்டிகளை நடத்த விடமாட்டோம் எனக் கலகக்குரல் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவரான உஸ்மான் கான், "தாழையூத்து பகுதியில் கடந்த ஓராண்டாகவே குடிநீர்த் தட்டுப்பாடு உள்ளது. அதைத் தீர்க்க, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 20 நாள்களாகத் தொடர்ந்து தண்ணீர் வராததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். 

தாமிரபரணி நதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரை குடிநீர் செல்லும் நிலையில், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களை அதிகாரிகள் தண்ணீருக்காக தவிக்கவைக்கிறார்கள்.

இந்த நிலை மாறி, மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றிக் கிடைத்திட மாவட்ட மற்றும்  ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், தாழையூத்தில் இன்னும் 10 நாள்களில் நடக்க இருக்கும்  டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த விடமாட்டோம்" என்றார் ஆவேசத்துடன்.

தாழையூத்தில் இன்று, சுற்றுப்புற கிராம மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ஏராளமானோர் காலிக் குடங்களுடன் பங்கேற்று அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டனர்.

கிரிக்கெட் போட்டியை நடத்த விடமாட்டோம் என்கிற அறிவிப்பு காரணமாக, அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close