Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழகத்தில் குடும்ப ஆட்சி முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்!'- ஹெச்.ராஜா ஆவேசம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகிலுள்ள ராஜகம்பீரத்தில் இருக்கும் பா.ஜ.க. பிரமுகரின் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ஹெச்.ராஜா,

 பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, "குடும்ப அரசியலும் ஜனநாயகத்துக்கு ஆபத்து. பண அரசியலும் ஜனநாயகத்துக்கு ஆபத்து. எனவே, தமிழகத்திலிருந்து குடும்ப ஆட்சி முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டால்தான், மாநிலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தமிழகம், கடந்த 50 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, ஆந்திரா ஆகிய பல்வேறு மாநில அரசுகள், தங்களது விவசாயிகளுடைய கடன்களை ரத்துசெய்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு இதுவரை விவசாயிகள் கடன்களை ரத்துசெய்யும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மன்னார்குடி குடும்பத்தின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது. சசிகலாவுக்கு என்ன வசதிகள் செய்வது என்பதைப்பற்றி கவலைப்படாமல், தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்' என்று ஆவேசமாகப் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close