Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி தேர்தல்: அ.தி.மு.க-வினர் ஓட்டு யாருக்கு?

திமுக தலைவர் கருணாநிதி

அ.தி.மு.க-வில் நிலவிவரும் அதிகார மோதலால் ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள்., எம்பி-க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டுவிடக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள்மூலம் அட்வைஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 எம்எல்ஏ-க்களில், ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகர் தொகுதி மட்டும் காலியாக உள்ளது. மொத்தம் உள்ள 233 எம்எல்ஏ-க்களில், அ.தி.மு.க. பெயரில் 135 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என்று மூன்று அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். மேலும், அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற மனித நேய ஜனநாயகக் கட்சி தமிமுன் அன்சாரி, 'காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பேன்' என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை  கருணாஸ் ஆகியோர், தங்கள் முடிவை இன்னும் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அவர்கள் தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை சமீபகாலமாக எடுத்துள்ளனர்.


 

அ.தி.மு.க. எம்பி-க்கள் மூன்று அணிகளாக உள்ளனர்.  அவர்கள் அனைவரும்  பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று கட்சி தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனாலும், பா.ஜ.க. மீது உள்ள கோபத்தால், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறார்களோ என்ற பயத்தில் எடப்பாடி பழனிசாமி அணி இருக்கிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க. ஓட்டுகள் அனைத்தையும் பா.ஜ.க-வுக்கு பெற்றுத்தந்துவிட வேண்டும் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறியாக இருக்கிறார். ஜூலை 16-ம் தேதி இரவு, தமிழக அமைச்சர்கள் தலைமையில் அணி அணியாக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஓட்டு போட வேண்டும் என்று அப்போது  வலியுறுத்தியதாகச் சொல்கிறார்கள்.

தமிழக சட்மன்றத்தில் தி.மு.க-வுக்கு  89 எம்எல்ஏ-க்கள், காங்கிரஸ் கட்சிக்கு  எட்டு எம்எல்ஏ-க்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏ  என்ற பலம் இருக்கிறது. இவர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர் மீரா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனாலும், இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று கட்சிகளின் கொறாடா உத்தரவு போட முடியாது என்பதால், அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களை இரு தரப்பிலும் இழுக்க முயற்சிகள் நடந்துவருகின்றன. தேர்தல் முடிவில்தான், எத்தனை பேர் அணி மாற்றி ஓட்டு போட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close