Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜி சிலை அகற்றப்படுமா? உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தி.மு.க. ஆட்சியின்போது, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டது. அந்தச் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது; அதை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் கூறியது. அதற்கு, தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

காமராஜர் சாலையில் இருக்கும் சிவாஜி சிலை


இந்நிலையில், கடற்கரை சலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றி, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரிசையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன், ''இந்த வழக்கு ஜூலை 17-ம் தேதி அன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. நடிகர் திலகத்தின் ஆசியுடனும் ரசிகர்களின் நம்பிக்கையுடனும், நம்முடைய கோரிக்கை நிறைவேறும் என்று நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்'' என்றார். இந்த வழக்கு முடிவில்தான் சிவாஜி சிலை கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்படுமா... இல்லையா? அப்படி அகற்றினால் மெரினாவிலேயே நிறுவப்படுமா... அல்லது அடையாறு சிவாஜி மணிமண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படுமா என்பது தெரிய வரும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close