Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெயலலிதா இருக்கும்போது கமலுக்கு தைரியம் இருந்ததா?!'- தமிழிசை கேள்வி

சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கரை படிந்துள்ளது என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, தமிழக அமைச்சர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்கள். இதையடுத்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கமலுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன் நீட்சியாக தற்போது பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கமலை விமர்சித்துள்ளார். 

கமல் ஹாசன் மற்றும் தமிழிசை

இந்த விஷயம்குறித்து தமிழிசை, 'அ.தி.மு.க. அரசின்மீது குறை சொல்ல ஜெயலலிதா இருக்கும்போது, கமலுக்கு தைரியம் இருந்ததா? இப்போது மட்டும் ஏன் குறை சொல்கிறார். திரைப்படத்துறையில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் கமல் கவனம் செலுத்த வேண்டும். திரைத்துறையின் குறைகளைச் சரிசெய்யும் வேலையை கமல் செய்தால் போதும், அரசியலைப் பின்பு பார்க்கலாம். கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காத கமல், தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பேசுகின்றார்' என்று கமலை விமர்சித்துள்ளார். 

மேலும், கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருந்த ஸ்டாலின்குறித்து தமிழிசை, 'ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவதை விட்டுவிட்டு தேவையற்றதில் தலையிடுகிறார்' என்று தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close