Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாட்டைக் கொன்றால் 14 ஆண்டுகள் சிறை; மனிதர்களைக் கொன்றால் 2 ஆண்டுதான்!''

மாட்டைக் கொன்றால்கூட 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், மனிதர்களைக் கொன்றால், இரண்டு ஆண்டுகள் தண்டனை அளிக்கவே சட்டத்தில் இடமிருப்பதாக நீதிபதி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற முறையில் கார் ஓட்டி விபத்து

Representational Image

டெல்லியில், 2008-ம் ஆண்டு உத்ஷவ் பஷீன் என்ற இளைஞர், பிஎம்டபிள்யூ காரை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தினார். அவரின் கார் மோதியதில், மோட்டார்சைக்கிளில் சென்ற அனுஜ் சவுகான் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீவஸ்த்தவா என்பவர் படுகாயமடைந்தார். இந்த வழக்கு, டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. 

விசாரணையில், உத்ஷவ் பஷீன், காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. நீதிபதி சஞ்சீவ் குமார், உத்ஷவுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது, ''நாட்டில் மாட்டைக் கொன்றால் 5, 7, 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமிருக்கிறது. ஆனால், பொறுப்பற்ற முறையில் கார் ஓட்டி மனிதர்களைக் கொல்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரைதான் தண்டனை விதிக்க சட்டம் இடமளிக்கிறது'' என வேதனை தெரிவித்தார். 

இந்தத் தீர்ப்பின் நகலை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கவும் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம்
304-ஏ பிரிவின் கீழ்தான் இது போன்று விபத்தை ஏற்படுத்துபவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. இதில், மாற்றம் கொண்டுவர வேண்டும் என்பது நீதிமன்றத்தின் வேண்டுகோள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close