Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் வாக்களித்த கேரள எம்எல்ஏ! காரணம் இதுதான்

கேரளாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், நாடு முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் எம்பி., எம்எல்ஏ-க்கள் வாக்களித்துவருகின்றனர்.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்துள்ளார். கேரளவைச் சேர்ந்த  ஐ.யூ.எம்.எல். கட்சி எம்எல்ஏ., அப்துல்லா. இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறேன் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கைப் பதிவுசெய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், எம்எல்ஏ., அப்துல்லா சென்னையில் வாக்களிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து, சிகிச்சைபெற்றுவந்த கேரள எம்எல்ஏ., அப்துல்லா, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், இன்று தனது வாக்கைப் பதிவுசெய்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close