Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழு வருடங்களாக வராத மானியத்திற்கு அரசுக்கு எதற்கு பாராட்டு? 'ஆதங்க' எஸ்.வி சேகர்

கமலஹாசன்

டிகர் கமலஹாசனை செய்தியாளர் சந்திப்பில் ஒருமையில் அமைச்சர் அன்பழகன் விமர்சித்த விவகாரம் பற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. அரசு நல்லதை செய்யும்போது பாராட்டும் திரையுலகம், ஆபாசமாய் பேசும்போது கண்டிக்கக்கூடாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் எஸ்.வி சேகர். 

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிவரும் நேரலை நிகழ்ச்சி தொடர்பாக நடிகர்  கமலஹாசன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில்,  “தமிழ்நாட்டில் உள்ள எல்லா துறைகளிலும் ஊழலும் லஞ்சமும் உள்ளன“ என்ற கருத்தை வெளியிட்டார். கமலின் இந்தக் கருத்துக்கு, கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தான் நடத்தும் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்தும் நோக்கில், அரசின்மீது கமல்  சேற்றை வாரி இறைப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம், கமலின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அன்பழகன், “கமல்ஹாசனுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரெல்லாம் ஓர் ஆளே கிடையாது" என்றதோடு, கமலை ஒருமையில் விமர்சித்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு, கமல் ரசிகர்கள் இணையத்தில் அமைச்சரைச் சாடி வருகின்றனர். 

எஸ்.வி.சேகர்இந்நிலையில் தமிழக அரசின் தமிழத்திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் சங்கம் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கும் நிலையில், கமலை அவமரியாதை செய்த தமிழக அரசை திரைத்துறை கண்டிக்காதது ஏன் என நடிகர் எஸ்.வி.சேகர் தன் ஆதங்கத்தைத்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் பேசினோம். “மத்திய அரசின் பத்மபூஷன் விருதுபெற்ற உலகமறிந்த ஒரு நடிகரை, அமைச்சர் அன்பழகன்,  “அவர் ஒரு ஆளே இல்லை என்று விமர்சித்திருப்பதோடு ‘அவன்’ ‘இவன்’ எனப் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. உயர் கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள ஒருவர் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். இப்படி அநாகரிகமாகப் பேசியிருப்பது அவரது தகுதியை அவரே அவமதித்துக்கொள்வது போலாகும். கமலஹாசனின் கருத்து சரியா, இல்லையா என்பதற்குள் புகவிரும்பவில்லை. எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை நாகரிமாக மறுத்திருக்கலாம். இப்படி ஒருமையில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரை பேசியிருப்பது பல லட்சம் பேரால் தேர்வு செய்யப்பட்டு பொதுவாழ்க்கைக்கு வந்திருக்கும் ஓர் அமைச்சருக்கு அழகல்ல... அதேசமயம் திரைப்படத்துறையினர் மீதும் நான் வருத்தப்படுகிறேன். திரையுலகின் மூத்த கலைஞன், தமிழ்சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மதிக்கப்படும் ஒரு கலைஞனை, தங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரனை ஒரு அமைச்சர் ஒருமையில் பேசியிருப்பதை கண்டும் காணாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழ்சினிமாவின் மூலம் அரசுக்கு வருமானமே தவிர, அரசு என்ற முறையில் தமிழ்சினிமாவுக்கு அவர்கள் செய்வது கடமைதான்.

திரைப்படத்துறைக்கு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டால் ஓடிப்போய் விழுந்தடித்து நன்றி சொல்கிறோமே, அதேபோல் நம் துறையைச் சேர்ந்த கலைஞனை ஒருமையில் பேசியிருப்பதை கண்டித்திருக்கவேண்டாமா... தமிழ்த்திரைப்படங்களுக்கு மானியம் அறிவித்ததற்கும் விருது அறிவிப்பிற்காகவும் திரையுலகம் பாராட்டுத் தெரிவித்திருப்பது கூட அவசியமற்றது. உண்மையில் ஜெயலலிதா பொறுப்பேற்ற 2011 முதல் மானியம் அளிக்கப்படவில்லை. 7 வருடங்களுக்குப்பின் இப்போதுதான் அறிவிக்கப்படுகிறது. இது பாராட்டுக்குரிய விஷயமல்ல. 

இப்போது அரசு மானியத்திற்காக விண்ணப்பிக்கப்பட்ட படங்களில் மூன்றில் இரண்டு பங்கு படங்களை நிராகரித்திருக்கிறார்கள். இவை ஏற்கெனவே வரிவிலக்கு அளிக்கப்பெற்ற படங்கள்தான். வரிவிலக்குக்கும், மானியம் அளிக்கப்படுவதற்கும் கிட்டதட்ட ஒரே நிபந்தனையைத்தான் தமிழக அரசு விதித்திருக்கிறது. அப்படியிருக்க வரிவிலக்குக்ந்த் தேர்வான படங்கள் மானியத்திற்கு தேர்வாகாதது ஏன் என்பதுதான் என் கேள்வி. வரிவிலக்கு கமிட்டியின் முடிவு தவறானதா அல்லது மானியத்திற்கான தேர்வு கமிட்டியின் முடிவு தவறானதா என்பதை அரசுதான் விளக்கவேண்டும். நடிகர்கள் என்னதான் கட்சிரீதியாக பிரிந்து கிடந்தாலும் தாங்கள் சார்ந்த தொழிலுக்கும் தங்கள் சக தோழனுக்கும் ஒரு பிரச்னை என வரும்போது அரசியலை மறந்து ஒன்றுபடவேண்டும். அப்படிச் செயல்பட்டால் இன்று கமலுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது.” என்றார்.  

சினிமாக்காரர்கள் அரசியலை நிர்ணயிக்கும் அதே மாநிலத்தில் சினிமாக்காரர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close