Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேராசிரியரால் பாலியல் தொந்தரவு! பிரதமருக்குக் கடிதம் எழுதிய ஐஐடி மாணவி!

புவனேஸ்வர் ஐஐடியில் பி.ஹெச்டி படிக்கும் மாணவி ஒருவர், தன் கைடு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக பிரதமர் மற்றும் ஒரிசா மாநில முதலமைச்சர் நவீன்பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாலியல் புகார்

புவனேஸ்வர் ஐஐடியில் பி.ஹெச்டி படித்து வரும் மாணவி ஒருவர், 2012ல் இருந்து தனது கைடால் பாலியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி மனஅளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக் கொண்ட கல்லூரிக் கமிட்டி முறையான விசாரணை நடத்தாததால் மாணவியின் பிரச்னை பெரிதாகியுள்ளது. கமிட்டியில் புகார் அளித்ததைத் தொடர்ந்து கைடு, தன் கணவரையும், தன்னையும் பி.ஹெச்.டி படிப்பை முடிக்க விடாமல் துன்புறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கும், முதலமைச்சர் நவீன்பட்நாயக்கிற்கும் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் மீது பிரதமர் மற்றும் முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவி வலியுறுத்தியுள்ளார். மாணவியின் வழக்கறிஞர் இது குறித்து விளக்கமளிக்க கல்லூரி செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இப்பிரச்னை அம்பலமாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close