Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா #EngVsSA

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது.  ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா இழந்த நிலையில் டெஸ்ட் தொடர்  கடந்த ஜூன் ஆறாம் தேதி தொடங்கியது. 

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் கடந்த 14-ம் தேதி துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. டுமினிக்கு பதிலாக டுபிளசிஸ் அணிக்குள் வந்தார். முதல் இன்னிங்சில் ஹாஷிம் ஆம்லா, குயின்டன் டீ காக், வெர்னோன் பிலாந்தர் ஆகியோர் அரை சதம் அடித்தனர். இதையடுத்து 335 ரன்களை குவித்தது தெ.ஆ. இங்கிலாந்து  தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

தென் ஆப்ரிக்கா Vs  இங்கிலாந்து

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து வெறும் 205 ரன்களை மட்டுமே குவித்தது. ஜோ ரூட் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.  பொறுமையாக ஆடிய தென் ஆப்பிரிக்கா மூன்றாவது நாளில் தேநீர் இடைவெளிக்கு பிறகு 343/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.  டீன் எல்கர் 80 ரன்களையும், ஆம்லா 89 ரன்களையும், டு பிளசிஸ் 63 ரன்களையும் விளாசினார்கள். மொயின் அலி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து 474 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என இமாலய இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி.

மூன்றாவது  நாளின் ஆட்டநேரத்தில் கடைசி நான்கு ஓவர்களை இங்கிலாந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்  குக்கும் ஜென்னிங்க்ஸும் தடுமாறினார்கள். நான்கு ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் எடுத்திருக்ககிறது இங்கிலாந்து அணி. வெற்றிக்கு இன்னும் 473 ரன்கள் தேவை.  நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்து இவ்வளவு ரன்களை சேசிங் செய்யுமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close