Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தடுப்பும் இல்லை; வேகத்தடையும் இல்லை- விளம்பரப் பலகைகளால் பலியான உயிர்கள்

காரைக்குடி அருகே இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விளம்பரப் பலகையால் இந்த விபத்து நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து பெரம்பலூர் செல்லுவதற்காக காரை பெரியசாமி ஓட்டி வந்தார். இவருடன் ஜெயபால் என்பவரும் உடன் வந்தார். கார் காரைக்குடி நகரிலிருந்து இருவழிச்சாலையைக் கடக்க முயன்றபோது பெங்களுரிலிருந்து தேவகோட்டை திருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் ஊருக்கு வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள் வந்த ஆம்னி காரும் பொலிரோ காரும் மோதிக்கொண்டதில் ஆம்னியில் பயணம் செய்த காமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்னி காரை ஓட்டி வந்தவர் தியாகராஜன். இவருடைய மனைவி ராதிகா, சரண்யா பிரகாஷ், குழந்தைகள் தீபக்ராஜ், திலிப்ராஜ், தீபன்ராஜ் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. உடனே காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பிரகாஷ் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். இந்த விபத்து குறித்து குன்றக்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த விபத்து நடக்க முழு காரணம் என்ன என்று விசாரித்தோம். காரைக்குடியிலிருந்து இருவழிச்சாலைக்கு ஏறும் இடம் ஆபத்தானதாக இருக்கிறது . எந்தத் தடுப்பும் இல்லை. வேகத்தடையுமில்லை. இங்கிருந்து ஏறிப்போவதற்கும் இருவழிச்சாலையிலிருந்து வருபவர்களுக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது தனியார் விளம்பர போர்டுகள்தான். இந்த விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்தினாலே விபத்துகள் குறைய வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் வேகத்தடைகளையும் போட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள். 
குன்றக்குடி போலீஸாரோ, ''நாங்கள் பொலிரோ கார் ஓட்டி வந்த பெரியசாமி மீது வழக்குபதிவு செய்து கைது செய்திருக்கிறோம். அதே நேரத்தில் லைசென்ஸ் ரத்து செய்யச்சொல்லி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிக்கு அறிக்கையும் அனுப்ப இருக்கிறோம். போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருக்கிறது. அதையும் மீறி அதிகாலை இப்படி சம்பவம் நடத்துவிட்டது. யார் மீது தவறு என்பதைவிட விலை மதிக்க முடியாத உயிர்கள் பலியான சம்பவம் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close