Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவ சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு அரசாணை ரத்து! மேல்முறையீடு செய்தது தமிழக அரசு

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையின்போது 85% இடஒதுக்கீடும், சிபிஎஸ்இ மற்றும் இதர பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 15% இடஒதுக்கீடும் வழங்கத் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.


மருத்துவ சேர்க்கைக்கு இந்தாண்டு மத்திய அரசு நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இதையும் மீறி, நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதனிடையே, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித இடஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியிட்டது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்த அரசாணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், மாநிலப் பாடத்தில் படித்த மாணவர்களுக்கான 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாரணையை ரத்துசெய்தது. இந்த தீர்ப்பின் முழு விவரம் கிடைத்ததும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சுகாதார செயலாளர், தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், "அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தனிநீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்திட வேண்டும்" என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close