Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி-யில் சந்தேகமா? வணிகர்களுக்கு உதவ உதவிக்குழுக்கள் அமைப்பு

வரி விதிப்பு குறித்து வணிகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வணிக வரித்துறை சார்பில் அனைத்து சரகங்களிலும், உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியலூரில் வணிக வரித்துறை சார்பில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் வணிகவரித்துறை உதவி ஆணையர் (தணிக்கை) பிரியா கலந்துகொண்டு ஜிஎஸ்டி-யில் செயல்படுத்தப்படும் வரிவிகிதங்கள், ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படும் பொருள்கள், வரிக்கான ஆவணங்கள் எவ்வாறு தாக்கல் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரியலூர், பெரம்லூர் மாவட்டங்களைச் சார்ந்த வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், தணிக்கைத் துறையினர் மற்றும் அரியலூர் வணிகவரித்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பிரியா, "வணிவரித்துறை மூலம் மாவட்டம்தோறும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு குறித்த கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. மேலும், துறைசார்ந்த அதிகாரிகளுக்கு ஜிஎஸ்டி குறித்த முழுமையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சரகங்கள்தோறும் உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படுகிறது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் வாட் வரிவிதிப்பில் இருந்த 3,500 பேர் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு மாறியுள்ளனர். தற்போது வரை
78 மனுக்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்காக ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 67 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வணிகர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரிவிதிப்பு குறித்து ஏற்படும் சந்தேகங்களை வணிக வரி அலுவலகத்தில் எப்போது வேண்டுமானாலும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close