Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரிக்கெட் போட்டிக்கு தாமிரபரணி தண்ணீர்; இந்தியா சிமென்ட் விளக்கம்

மிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி ஜூலை 22-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டு இந்த போட்டித் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. நடப்புத் தொடரில் நெல்லை, சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமென்ட் நிறுவன மைதானத்தில் 12 போட்டிகள் நடைபெற உள்ளன.  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், கிரிக்கெட் மைதானத் தேவைக்காக தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

நெல்லையில் கிரிக்கெட் போட்டிக்கு எதிராகப் போராட்டம்

இந்தியா சிமென்ட்  நிறுவனம், 'தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்கவில்லை' என மறுத்துள்ளது. அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ''எங்கள் வளாகத்திலேயே குடிநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. அதில், இருந்து எடுக்கப்படும் நீரையே மைதான பராமரிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம்.  தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கவில்லை'' என்று கூறியிருக்கிறது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ''நிறுவன வளாகத்திலேயே நீர் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். எங்கிருந்து நீர் கிடைக்கிறது என்பதை அந்நிறுவனம் விளக்க வேண்டும். தாமிரபரணி தண்ணீர் பெறவில்லை என்றால் இந்தியா சிமென்ட் நிறுவனம், தமிழ்நாடு குடிநீர் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் பில் பாக்கி வைத்திருப்பது ஏன்'' என கேள்வி எழுப்புகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close