Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹைதராபாத்தில் காணாமல் போன சிறுமி மும்பையில் கண்டுபிடிப்பு 

ஹைதராபாத்

ஹைதராபாத்தில்  சில நாள்களுக்குமுன்  காணாமல் போன சிறுமி பூர்ணிமா சாய், தற்போது மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஜூன்  7-ம் தேதி, ஹைதராபாத்தில்  தனது வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்ற பூர்ணிமா, அதன்பிறகு காணாமல் போனார். இதனையடுத்து,  பச்சுபள்ளி (Bachupally) காவல் நிலையத்தில் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர்.  பூர்ணிமா காணாமல்போய் ஒரு மாதத்துக்கு மேலான நிலையில், மும்பையிலுள்ள  ஓர் ஆசிரமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 11-ம் தேதி ரயில் மூலம் மும்பை சென்றுள்ள பூர்ணிமாவை, மும்பை ரயில்வே  காவல்துறை  விசாரித்துள்ளனர். அப்போது, அவர் தனது பெயர்  அனிதா ஸ்ரீ என்றும், ஹைதராபாத்திலுள்ள  ஸ்ரீ சாய்ராம் ஆசிரமத்திலிருந்து வருவதாகவும் கூறியிருக்கிறார். பிறகு, மும்பையிலுள்ள  பாலாசுதர் க்ரூஹ்  என்ற காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.  பூர்ணிமாவை பற்றின  உண்மை விவரங்களை இந்த காப்பகம் கண்டுபிடித்து, மும்பை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

பூர்ணிமா காணாமல்போன  பிறகு, சைபராபாத் காவல்துறை  30-க்கும் மேற்பட்ட  காவல்துறையினர்  தெலங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் மகாராஷ்ட்ராவில் தேடினர். 

இதுகுறித்து அவரின் பெற்றோர் கூறுகையில், ”நாங்கள் தற்போது மும்பையில் இருக்கிறோம். இன்னும் பூர்ணிமாவைப்  பார்க்கவில்லை. ஆனால், அவர் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என்பதே எங்களுக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது.  அவளைப் பார்க்க ஆவலாக உள்ளோம்”,  என்று தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close