Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிகரெட் விலை உயர்கிறது!

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சிகரெட்


கடந்த 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தபட்டதில் இருந்தே, புதிய வரி தொடர்பான குழப்பங்கள் நீடித்துக்கொண்டே இருந்தது. மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜிஎஸ்டி குறித்து விளக்கங்களை வணிகர்களிடமும் பொதுமக்களிடமும் தெரிவித்து வந்தனர். 

அப்போது வணிகர்கள் ஜிஎஸ்டி வரியால் தாங்கள் பாதிக்கப்படுவது பற்றி தெரிவித்தனர். அதேபோல மாநில நிதிஅமைச்சர்களிடமும் வரிவிகிதங்களை மாற்றி அமைக்க பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடந்தது. தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்தபடி பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் சிகரெட் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close