Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெருமாள்சாமி இனி எடப்பாடியின் எஸ்கார்டு!

பெருமாள்சாமி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு அளித்த ஒட்டுமொத்த பாதுகாவலர்களும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புத் தொடரணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரிய பெருமாள்சாமி முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகியுள்ளார்.  

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக வரும் கான்வாய் மிகப்பிரசித்தம். இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவின் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத அளவுக்குக் கடுமையான பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அதிலும், அவரது இறுதிக்காலத்தில் பணியாற்றிய முதல்வரின் பாதுகாப்பு அலுவலராக இருந்த பெருமாள்சாமி மிகப்பிரபலம். ஜெயலலிதாவின் கண் அசைவைக்கூடப் புரிந்துகொண்டு செயல்படக்கூடியவர் என்று பெயர் எடுத்தவர் அவர். 

முதுமலையில் யானைகளுக்கான முகாமை முதல்வராக இருந்த ஜெயலலிதா பார்வையிட்டபோது, அங்கிருந்த குட்டி யானை மகிழ்ச்சி துள்ளி ஜெயலலிதாவின் மீது மோதியது. அப்போது அவருக்கு ஏதும் ஆகிவிடாதபடி உள்ளே புகுந்து காப்பாற்றியவர் பெருமாள்சாமிதான். பின்னர், ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பலனளிக்காமல் காலமானார். அப்போலோவிலிருந்து போயஸ் கார்டன் வீடு வரை கொண்டு செல்லப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்குப் பாதுகாப்பு அளித்தது பெருமாள்சாமி தலைமையிலான குழுதான். அடுத்த நாள் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்ய குழிக்குள் இறக்கப்பட்டதும் எங்கிருந்தோ வந்த பெருமாள்சாமி தன் இறுதி வணக்கத்தைச் செலுத்திச் சென்றார். அதன் பின்னர் எங்கும் வெளியே வராத அவர், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதுகாப்பு அதிகாரியாகி உள்ளார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய அதிகாரி அ.தி.மு.க பிளவுபட்டுள்ள நிலையில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாகியுள்ளது அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பான செய்தியாகி உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close