Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உறவினர்  மகளுக்கு பாலியல் தொந்தரவு:  நூதன முறையில் தண்டனை கொடுத்த ஊர் மக்கள்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை போட்டு நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளனர்.

 


கர்நாடகா மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹித்தாநஹல்லி டான்டா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராதோட். இவருடைய உறவினர்  உமாராஜ் ரத்தோடின் ஊரில் நடந்த  ஊர் திருவிழாவுக்கு கடந்த 12-ம் தேதியன்று சென்றிருக்கிறார். அங்கு மது போதையில்  உறவினர் உமாராஜின் மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உமாராஜ், தன்னுடைய உறவினர்கள், ஊர்மக்களுடன் சேர்ந்து, சங்கருக்கு பெண்கள் உடுத்தும் பாவாடையை அணிவித்து, பாதி தலையை மொட்டையடித்து, செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியுள்ளனர். 


இதையடுத்து சங்கர், தன் மீது போலியாக குற்றச்சாட்டு வைத்து, ஊர்மக்களோடு சேர்ந்து அவமானப்படுத்தியதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். உமாராஜும் தன் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார் அளித்தார். பின்னர், சங்கரை கைது செய்த போலீஸார், உமா ராஜுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close