Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறையில் தில்லுமுல்லுகள்: இன்று ரூபா... நாளை சசிகலா..?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் தனி சமையலறை, சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் சிறைத்துறை போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா அதிரடி புகார் கூறி இருந்தார். இது கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கும், டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

டி.ஐ.ஜி ரூபா நடவடிக்கையால் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் 2 பிளவுகளாக பிரிந்து செயல்படுகிறார்கள். இதுபற்றி, பெங்களூரு தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா கூறுகையில், ‘ஜூலை 15-ம் தேதி இரவு, கைதிகள் 2 பிரிவுகளாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், சிறைக்குச் சென்ற நான், கைதிகளின் 2 பிரிவினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினேன்'  என்றார். அதன்பின், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் மாநிலத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர். மேலும், டி.ஐ.ஜி. ரூபா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து, சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றலாமா? அல்லது வெளிமாநில சிறைக்கு மாற்றலாமா? என்று கர்நாடக அரசு ஆலோசனையில் இறங்கியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close