Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா..? படங்கள் வெளியானதால் பரபரப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நட்சத்திர ஓட்டல் போல் சிறப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று  சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா சொன்னது கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. ரூபா கூறுகையில், ''சசிகலாவுக்குத் தனி சமையல் அறை. ஓய்வு எடுக்க தனி அறை, பார்வையாளர்களைச் சந்திக்க இருக்கை வசதியுடன் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 கோடி ரூபாய் கைமாறி இருக்கிறது' என்று தெரிவித்தார். 

சசிகலா


இந்நிலையில் சசிகலாவுக்குச் சிறையில் என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கசிந்து இருக்கிறது. இதன்படி அவருக்கு ஒதுக்கப்பட்ட சிறைப் பகுதியில் 5 அறைகள் இருக்கின்றன. சசிகலாவை மற்ற கைதிகள் நெருங்கவே முடியாதபடி, தனி அறை கொடுக்கப்பட்டு இருக்கிறது. வேறு யாரும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு தடுப்புப் சுவர் வைக்கப்பட்டிருந்தது. சிறையில் இருக்கும் சசிகலாவை உறவினர்கள், கட்சிக்காரர்கள் சந்திக்கும் காட்சியை வீடியோ கேமரா கண்காணிப்பில்தான் நடக்க  வேண்டும். ஆனால், சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பார்வையாளர் அறையில் கேமரா வசதி அகற்றப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பது போலவே சகல வசதிகளுடன் சிறையில் இருக்கிறார் என்று பெங்களூரு பத்திரிகைகள் டிஐஜி ரூபாவை மேற்கோள் காட்டி பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. 

சசிகலாவின் சிறை அறை

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ''விவிஐபி என்ற அடிப்படையில் பாதுகாப்பு விதிகள் சசிகலாவுக்குக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. ரூபா சொல்வது போல சிறப்பு வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை' என்று தெரிவித்துள்ளார். ஆனால், சசிகலாவுக்குச் சிறப்பு வசதிகள் செய்து கொடுத்து இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close