Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் கடிதம் இருந்தால் கல்லூரியில் சீட்! இல்லாவிட்டால் அவுட்!- சிவகங்கையில் மாணவர்கள் சாலை மறியல்!

சிவகங்கை மன்னர் கலைக்கல்லூரியில் சீட் கிடைக்காத 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கையைச் சுற்றி அதிகமான கிராமங்கள் இருப்பதால், விண்ணப்பங்கள் இந்தாண்டு அதிகளவில் கல்லூரிக்கு  குவிந்தது. கிராமப்புற மாணவர்கள் பட்டம் பயில இந்தக் கல்லூரியைவிட்டால் காரைக்குடி மதுரை திருப்பத்தூர் என தனியார் கல்லூரிகளை நாடிச்செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகையால், கூடுதல் சீட் ஒதுக்கீடு செய்யுமாறு  அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இந்தாண்டு 130 சீட் கூடுதலாக கிடைத்தது. முதல் கவுன்சிலிங் முடிவடைந்து மாணவர்கள் சேர்க்கை நடந்து முடிவடைந்து விட்ட நிலையில், அதிகமான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை எழுப்பினார்கள் மாணவர்களும் பெற்றோர்களும். கல்லூரி முதல்வர் சரியான பதில் சொல்லாததால் சீட் கிடைக்காத மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.


 

தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், தாசில்தார் நாகநாதன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். 'சாலைமறியல் செய்வது குற்றம். நீங்கள் நீதிமன்றத்தின் மூலமே நிவாரணம் தேடிக்கொள்ளவேண்டும்' என்று அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள். இந்த மாணவர்களுக்கு ஆதரவாக தி.மு.க நகரச் செயலாளர் துரை ஆனந்த் கலந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார்.

விருதுநகர் பகுதியில் இருந்து வந்திருந்த பெற்றோர்கள் பேசும்போது, “என் மகள் எழுநூறு மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்கிறாள். ஆனால், ஐந்நூறு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் கிடைத்திருக்கிறது. கேட்டால் அமைச்சர், எம்எல்ஏ, எம்பி-னு சொல்லுறாங்க. நீங்களும்  எம்எல்ஏ கிட்ட லெட்டர் வாங்கிட்டு வாங்க உங்களுக்கும் சீட் உண்டுனு சொல்லுறாங்க. நாங்க எந்த எம்எல்ஏ-வ பாக்குறது. லெட்டர் வாங்குறது. அரசுக் கல்லூரியில் இதுபோன்ற தவறுகள் ஒழிக்கப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்வார்களா இல்லை அமைச்சர், எம்எல்ஏ, எம்பி லெட்டர் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்வார்களா என்பது தெரியவில்லை. கல்லூரி முதல்வர் எங்களுக்கு நோட்டீஸ் போர்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை வெளிப்படையாக ஒட்ட வேண்டும்”. என்றார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close