Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டது ஏன்?'- மு.க.ஸ்டாலின் விளக்கம் 

ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழக சட்டமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் ஓட்டு போட்டார்கள். இதுபற்றி ஸ்டாலின் கூறுகையில், 'இந்திய ஜனாதிபதியைப் பொறுத்தவரையில், ஒட்டுமொத்த இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருக்கக்கூடிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  பெரும்பான்மையுடன் இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில், ‘அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையோடு, போட்டியின்றி ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’, என்று ஒரு கபட நாடகத்தை நடத்திவிட்டு தன்னிச்சையாக ஒரு வேட்பாளரை நிறுத்தியது.

ஸ்டாலின்

அதனால்தான் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும், ஆளும்கட்சியான பி.ஜே.பி நிறுத்தியுள்ள வேட்பாளரை எதிர்த்து 17 கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியாக சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு, களத்தில் இறக்கியிருக்கின்றன என்று சொன்னால், அதுவே ஒரு மிகப்பெரிய வெற்றிக்கு அடிகோலாக அமைந்திருக்கிறது'' என்று தெரிவித்தார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close