Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓட்டுப் பெட்டிகள் டெல்லி சென்றன... ஜூலை 20-ம் தேதி  வாக்கு எண்ணிக்கை!

இந்திய ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் 5 ஆண்டு பதவிக் காலம் முடிவதையொட்டி புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்தவற்கான தேர்தல் அறிவிப்பு ஜூன் 14-ம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஜூன் 28-ம் தேதி வேட்பு மனுத்  தாக்கல் முடிந்தது. 29-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. ஜுலை 1-ம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்கும் நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மோடி ராம்நாத்கோவிந்


பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் சார்பில் மீரா குமார் ஆகியோர் போட்டியிட்டனர். ஜூலை 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடந்தது. அதன் பின்னர், ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பாதுகாப்புடன் ஓட்டுப் பெட்டிகள் டெல்லி கொண்டு செல்லப்பட்டன. ஜூலை 20-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நாட்டின் 14-வது ஜனாதிபதி யார் என்பது அப்போது அதிகாரபூர்வமாக தெரிந்துவிடும்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close