Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்துல் கலாம் மணி மண்டபம் திறப்பு: பிரதமர் மோடி வருகை!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் ஜூலை 27-ல் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி ராமேஸ்வரம் அருகே கட்டப்பட்டுவரும் மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் தேசிய நினைவிடம் திறப்பு விழா காணத் தயாராகிவருகிறது. இதற்காக நினைவிடப் பணிகளை மத்தியப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் கிறிஸ்டோபர் நேற்று ஆய்வு செய்தார்.

மணிமண்டபம்

ராமேஸ்வரத்தில் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அப்துல் கலாம் மணி மண்டபத்தைப் பிரதமர் மோடி ஜூலை  27-ம் தேதி திறந்து வைக்கிறார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரம் அருகே பேய்க்கரும்பில் உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்புத் துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பில் அப்துல்கலாம் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அப்துல் கலாம் நினைவிடம்

 

தற்போது நினைவிடத்தின் முதற்கட்டப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதைத்தொடர்ந்து கலாம் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல்கட்டமாக கலாம் பயன்படுத்திய புத்தகங்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து அறிவுசார் மையம், கோளரங்கம் எனப் பல வசதிகளை இங்கு ஏற்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close