Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கைப்பற்றப்படும் கடத்தல் தங்கம்! 

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பிடிபடுவது தொடர்ந்துகொண்டே உள்ளது.

பன்னாட்டு விமான நிலையமாக விளங்கும் திருச்சி விமான நிலையத்துக்கு, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து விமானப் போக்குவரத்துகள் உள்ளன. அந்த நாடுகளில் இருந்து திருச்சி வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினர் பரிசோதனை செய்தனர். இதில் மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பணிகளிடம் முறையே சோதனை நடத்தியதில், அவர்கள் இருவரும் 180 கிராம் முற்றுப்பெறாத தங்க நகைகளைத் தங்களின் உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கடந்த  6-ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாயிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.33 லட்சம் மதிப்பிலான தங்கத்தைப் பறிமுதல் செய்ததோடு, அதனைக் கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த வாசிம் கல்ப் மற்றும் அபுபக்கர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் அடுத்தடுத்து திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் தொடர்ந்து நடப்பதால் சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close