Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விலகிச் சென்றதால் ஆத்திரம்' - பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர்

ஆசீட் வீச்சு

ஹைதராபாத் பெட்பாசீர்பாத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டார். ஹைதராபாத்தின் டட்டார்நகரைச் சேர்ந்தவர் கபீரா பேகம். இவரும் ஆசிட் வீசிய பிரதீப்பும் சுபாஷ் நகரில் உள்ள மின்விசிறி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் சில நாள் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கபீராவுக்கும் பிரதீப்புக்கும் பிரச்னை எழுந்துள்ளது. இதனால் கபீரா பிரதீப்பை விட்டு விலகிவிட்டார். இருந்தபோதும், பிரதீப் விடாமல் கபீராவை துரத்தி வந்துள்ளார்.

சம்பவத்தன்று அலுவலகம் விடுமுறை என்பதால், கபீரா வீட்டில் இருந்துள்ளார். பிரதீப் வீட்டின் அருகில் வந்து கபீராவை போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்படி அழைத்துள்ளார். கபீராவும் வெளியே வந்துள்ளார். இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை வாக்குவாதத்தில் முடிவடைந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கபீராவின் மீது ஊற்றிவிட்டு ஓடிவிட்டார். கபீராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கபீராவைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீஸார் ஆசிட் வீசிய பிரதீப்பைத் தேடி வருகின்றனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close