Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதிக்கு ஆதரவு அளித்த ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள்!

திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வர விலக்குக் கோரிய தீர்மானம் ஆளும்கட்சி ஆதரவுடன் இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு மாத காலமாக உடல்நலக்குறைவால் தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். அதனால் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

நேற்று நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலிலும் கருணாநிதி உடல்நிலை குறைபாடு காரணமாக வாக்களிக்கவில்லை. இந்நிலையில், இன்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின், சட்டப் பேரவையில் கருணாநிதி இந்தக் கூட்டதொடரில் பங்கேற்க விலக்கு அளிக்கக் கோரிய தீர்மானம் ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானம் இன்று சட்டசபையில் ஆளும் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. அதனால் நடப்புக் கூட்டத்தொடரில் கருணாநிதி பங்கேற்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சட்ட பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருந்தால் அவரைத் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. தற்போது இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அவரைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close