Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெதர்லாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யு.ஏ.இ அணி வெற்றி! #UAEvsNED

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, நெதர்லாந்தில் நேற்று நடைபெற்றது. 

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த நெதர்லாந்து அணி, யு.ஏ.இ அணியின் துல்லியமான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. அதிகபட்சமாக நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் 56 ரன்களும், ஜூல்பிகர் 41 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. யு.ஏ.இ அணியின் கேப்டன் ரோஹன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அம்ஜத் ஜாவேத் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

யு.ஏ.இ - நெதர்லாந்து ஒருநாள் கிரிக்கெட் 2017

183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய யு.ஏ.இ அணியும் சீரான இடைவெளியில் 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தாலும், 49 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக யு.ஏ.இ வீரர் முகமது உஸ்மான் 57 ரன்களும், கேப்டன் ரோஹன் 34 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். நெதர்லாந்து வீரர் பால் மீகிரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close