Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்குத் தயார்: அப்போலோ பிரதாப் ரெட்டி!

'ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்குத் தயார்'' என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி அறிவித்துள்ளார்.

பிரதாப் ரெட்டி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சர்ச்சை என்பது மிகப்பெரிய மர்மமாக இன்றுவரை தொடர்கிறது. "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோ வெளியிட்டு இருக்கலாமே" என்ற மக்களின் கேள்விக்கு, "அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட எம்டிசிசியு வார்டில் சி.சி.டி.வி. கேமாரா இல்லை" என அப்போலோ நிர்வாகம் முன்னர் அறிவித்திருந்தது. பின்னர் தனது அதிகாரபூர்வ வலைதளபக்கத்தில், ''உலகத்தில் எந்த மூலையிலிருந்தாலும் அப்போலோ வளாகத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பார்க்கலாம்'' என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் சர்ச்சையை அதிகப்படுத்தியது.

இதுகுறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி இன்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பிரதாப் ரெட்டி கூறுகையில், ‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டால் அந்த விசாரணையைச் சந்திக்கத் தயார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது சிகிச்சையில் வெளியிலிருந்து எந்தவொரு தலையீடும் இல்லை’ எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close