Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''இராணுவ வீரர்களுக்கு முன் நான் செய்தது ஒன்றும் பெரிதில்லை'' - 'டன்கிர்க்' ஹாரி ஸ்டைல்ஸ்

கிரிஸ்டோபர் நோலனின் இயக்கத்தில் வெளி வர இருக்கும் படம் 'டன்கிர்க்'. இரண்டாம் உலகப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கிறது. ஹாலிவுட் பிரியர்களின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். அவரின் முந்தைய படங்களைவிட  இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

'டன்கிர்க்' ஹாரி ஸ்டைல்ஸ்

இந்தப் படத்தில் ஆங்கில பாப் சிங்கர் ஹாரி ஸ்டைல்ஸும் நடித்துள்ளார். படத்தில் அவர் நடித்த அனுபவங்களைப் பற்றி பத்திரிகையாளர்களிடம், ''படத்தில் நான் தண்ணீருக்கு அடியில் இருக்குமாறு ஒரு காட்சியில் நடித்துள்ளேன். முதலில் அவ்வாறு நடிக்க எனக்குப் பயமாக இருந்தது. பின், இரண்டாம் உலகப் போரின் போது என்னைவிட ஏராளமான இராணுவ வீரர்கள் கஷ்டபட்டு இருப்பார்கள். அதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நான் இவ்வாறு நடிப்பது பெரிய விஷயம் இல்லை. அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன் இதைதான் நினைத்துக் கொண்டேன்'' என்று கூறினார். இப்படி எதிர்பார்ப்பின் உச்சத்தை அடைந்த இப்படம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியாக உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close