Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்களுக்கு பாதுகாப்பில்லை! மதுக்கடைகளை மூடக்கோரி கலெக்டரிடம் பெண்கள் மனு

மதுக்கடை

திருச்சி பாபு ரோட்டில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவதாகக் கூறி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

திருச்சி பாபு ரோடு பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள், பலமுறை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மனு கொடுத்து விட்டனர். ஆனாலும் அந்தக் கடைகள் அகற்றாத காரணத்தால், குடிகாரர்களின் தொல்லை அதிகரித்துவிட்டது. போதையில் தள்ளாடும் நபர்கள், வீட்டுவாசல், கடைவாசல், நடுரோடு எனப் பல பகுதிகளில் ஆங்காகே விழுந்துகிடப்பதும் சத்தமிடுவதும் எனத் தொல்லைக் கொடுக்கின்றனர். இந்நிலையில் ஒருங்கிணைந்த பாபு ரோடு குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் இணைந்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்தனர்.

அவர்கள், “இரண்டு கடைகளையும் உடனே அகற்ற வேண்டும். மதுக்கடைகளால் பெண்களுக்கும் மாணவ-மாணவியருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அதனால், அப்பகுதியில் குடிமகன்கள், குடித்துவிட்டு சண்டைபோடுவது, கத்துவது, அசிங்கமாகப் பேசுவது என மோசமாக நடந்துகொள்கிறார்கள். எனவே, அப்பகுதியில் சி.சி.டி.வி கேமரா உள்ளிட்டவற்றை அமைத்துக் கண்காணிக்கவும், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இடையூறு செய்யும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close